Tuesday 19 November 2013

உடையார் வள்ளால மகாராஜா கட்டிய திருவண்ணாமலை சிவன் கோயிலிற்கு உடையார் கிருஷ்ணதேவராயரின் பங்கு

உடையார் வள்ளால மகாராஜா கட்டிய கோயிலைப் பற்றியும்

அருணாச்சலேஸ்வரரை பற்றியும்
திருவண்ணாமலையை பற்றியும்
அருணகிரிநாதர் அவர்கள் எழுத்துகள்
முலம் சிறப்பாக உரைத்துள்ளார்.

இப்படைப்புகளை வாசித்த சோழ உடையார் பரம்பரை
மன்னர்கள் மிகவும்
பூரிப்படைந்து இக்கோயிலுக்காக பல
உதவிகளை செய்துள்ளனர்.

மேலும்
கடவுள் அருணாச்சலேஸ்வரர்
மகிமை மீது மிகுந்த
நம்பிக்கை அடைந்துள்ளனர்.

சோழ உடையார் பரம்பரை
மன்னர்கள் பல கோபுரங்கள், மண்டபங்கள்,
கோயிலை சேர்ந்த கட்டிடங்கள்
கட்டிகொடுத்து கடந்த ஆயிரம் காலமாக
கோயில் முன்னேற்றம் அடைய
உதவியுள்ளனர்.

மேலும் விஜய நகரை ஆண்ட மன்னர்
கிருஷ்ணதேவராயர் உடையார்
திருவண்ணாமலை கோயில்
வளர்ச்சிக்காக கோபுரங்கள், மண்டபங்கள்
என பல
கட்டிடங்களை கட்டிக்கொடுத்து உதவியுள்ளார்.

இதில் 217 அடி கொண்ட ராஜகோபுரம்
மன்னர் கிருஷ்ணதேவராயர் உடையார் உதவியால்
உருவாக்கப்பட்டது.

இவர்
அண்ணாமலையாரின் தீவிர பக்தராக
விளங்கினார்.

இக்கோபுரமானது இந்தியாவின்
உயரத்தில்
இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

மேலும் இக்கோயில் சிவன்
பார்வதிக்காக இந்தியாவில் கட்டப்பட்ட
மிக பெரிய கோயில்
என்று வரலாறு கூறுகிறது.

மற்றும்
ஒரு சிவன் பக்தரான
பல்லாலா இக்கோயிலுக்காக பல
கட்டிடங்கள் கட்டி கொடுத்துள்ளார்.
இவர்
செய்த உதவியை சிவனடியார்
பாராட்டும் விதத்தில்
பல்லாலா இறைவனடி சேர்ந்த
பின்பு சிவபெருமானே வந்து இம்மன்னருக்கு வாரிசு இல்லை என்றதால்
அவரே இறுதி சடங்குகள் செய்தார் என
வரலாறு கூறுகிறது.

சிவனடியார் இங்கு அக்னி வடிவத்தில்
உருவான
மற்றொரு வரலாறு சுவாரசியமான
புராணம். ஒரு தருணத்தில்
பிரம்மா மற்றும்
விஷ்ணுவிற்கு வாக்குவாதம்
ஈற்பட்டு உச்சத்தை எட்டிய நிலையில்,
சிவன்
இதற்கு ஒரு முடிவை எடுத்துரைக்க
அக்னி வடிவத்தில்
தோற்றமளித்து விஷ்ணுவையும்,
பிரம்மாவையும் சிவனுடைய கால்கள்
மற்றும் சிரசத்தை கண்டுபிடிக்க சவால்
விடுத்தார்.

இந்த சவாலை ஏற்ற
பிரம்மா மற்றும்
விஷ்ணு தோல்வியடைந்தனர். இந்த
போட்டியில் பிரம்மா ஜெயிக்க
சிவனிடம் பொய் சொல்லிவிட்டார்.
இதனால் கோபமடைந்த சிவன்
பிரம்மாவிற்கு சாபம் கொடுத்தார். இந்த
சாபத்தினால்
பிரம்மாவிற்கு இந்தியாவில் எந்த
இடத்திலும் கோயில் இல்லை. இதனால்
பிரம்மாவை யாரும் எந்த
கோயிலிலும் சென்று வணங்க
முடியாத நிலை உள்ளது.

இன்று திருவண்ணாமலையில்
சிவனடியார் அக்னியாக
வழிபடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய
காரணமாக உள்ளது. ஆதலால்
இது ஒரு பஞ்சபூத ஸ்தலமாக
தமிழ்நாட்டில் திகழ்கிறது.

Monday 18 November 2013

உடையார் வழிபட்ட சாமுண்டீஸ்வரி

சூரிலிருந்து 13வது கி.மீ.
தொலைவில்
சாமுண்டி குன்று உள்ளது.

சாமுண்டீஸ்வரி குடிகொண்டுள்ள
இடம் இது.

மலையின் மீது கோயில்
அமைந்துள்ளதால் 1000 படிகள் ஏறிச்
சென்று தரிசிக்க வேண்டும்.

இந்த மலையின் உயரம் 3489 அடி.
வழியில் பாதி தொலைவில் அழகிய
நந்தியைக் காணலாம்.

கருங்கல்லால்
ஆன இது எண்ணெய் மெழுகியும், பல
அபிஷேக தீர்த்தங்கள் ஊற்றியும்
இன்று முழு  கறுப்பாக
மாறிவிட்டது.

16 அடி உயரம் கொண்ட
கம்பீர நந்தியை 1659ஆம்
ஆண்டு மைசூர் மகாராஜ கொட்ட
தேவராஜ உடையார்
பிரதிஷ்டை செய்தார்.

ஸ்கந்த புராணம்

உட்பட சில
புராணங்கள் இந்த இடத்தை

"திரிமுட
க்ஷேத்திரம்'

என வர்ணிக்கின்றன.

சுற்றி எட்டு மலைகள் உள்ளன.

மேற்குப் புறத்தில் உள்ள
மலை சாமுண்டி.

இந்தப் பகுதியில் மிகப் பழைய
மகாபலேஸ்வரர் சிவன் கோயில்
உள்ளது.
இதனால் இந்த
மலையை மகாபலாத்ரி எனவும்
அழைக்கின்றர்.

தேவி சாமுண்டீஸ்வரி நினைவாகவே இது "சாமுண்டி மலை'
என அழைக்கப்படுகிறது.

தசரா நேரத்தில் அரண்மனை உட்பட
மைசூர் முழுவதும் அலங்கார
விளக்குகள் போட்டு ஜொலிக்கும்.

அதனை  இந்த மலையின்
மீதிருந்து பார்த்தோமானால்,
"ஆஹா... தேவர் உலகமோ' என வியக்க
வைக்கும்.

சாமுண்டி ஆதிசக்தியாக
வணங்கப்படுகிறார். அவள் பிரம்மா,
விஷ்ணு, சிவன் ஆகிய
மூன்றுமே ஒன்றான  "மகாபிரம்மம்'
"மகாசக்தி' என மக்கள் நம்புகின்றனர்.

சாமுண்டி கோயிலுக்கு இடது புறம்
மகிஷாசுரனை காணலாம். 3.5 மீட்டர்
உயரத்தில், வலது கையில்
கத்தியுடனும், இடது கையில்
பாம்புடனும் ஆக்ரோஷமாய்
இருக்கிறான்.

சாமுண்டி கோயில் 1000
ஆண்டுகளுக்கும் மேல்
பழைமையானது.

முதலில் சின்ன
கோயிலாக இருந்து 1399ல் மைசூர்
உடையார் ஆட்சி வந்ததும்,
பெரிதாக்கப்பட்ட கோயில்.

மைசூர் உடையார்
மன்னர்களின்  குலதெய்வம்
சாமுண்டேஸ்வரி.

ஹோய்சாள - விஜயநகர - மைசூர்
மன்னர்களும் இந்தக்
கோயிலுக்கு ஏராளமான
திருப்பணிகளைச் செய்துள்ளனர்.

கோயிலின் ஏழு அடுக்கு கோபுரம்
நம்மை கம்பீரமாய் வரவேற்கிறது.

உடையார்

தென் இந்தியாவின் முக்கிய
அரசுகளில் மைசூர் அரசும் ஒன்று.

மைசூர் அரசர்
மதுரையை தாக்கி மூக்கறுப்பு போர்
நடந்தது வரலாற்றில் முக்கியமானது.

அதில் இருவரும் ஒரே சாதியாக
இருந்தாலும் போர் நடந்தது என்றும்
.
கன்னிவாடி பாளையக்காரர்
செப்பேட்டில் மைசூர்
அரசர்களை நோக்கி எழுதப்பட்ட
செப்பேட்டில் " எருமை நாட்டை ஆண்ட ஸ்ரீ ஸ்ரீ
ஸ்ரீ
மகாராஜா தொட்டப்பா ராயா சேனாபதி சிக்க
உடையார் " என்று உள்ளது.

கிருஷ்ணதேவராய உடையார்

இந்தியாவின் ஆக்ராவில்
தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும்
இடம், மைசூர் அம்பாவிலாஸ்
அரண்மனைதான்.

மைசூர் அரண்மனை கட்டப்பட்டு இந்த
ஆண்டுடன் நூறாண்டுகள்
நிறைவடைகிறது.

மைசூர்
யதுவம்ச மன்னர்களின் வரலாற்றைக்
கூறும் மைசூர் அரண்மனை 1897-ம்
ஆண்டு அக்டோபர் மாதம் கட்ட
துவங்கப்பட்டது.

பதினைந்து ஆண்டு கால மனித
உழைப்பிற்குப் பின்னர் 1912-ம் ஆம்
ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.
இதற்கான செலவு 41 லட்சத்து 47
ஆயிரத்து 913 ரூபாய்.

உடையார் மன்னர்களின்
புகழுக்கு எடுத்துக்காட்டாக
விளங்கும் இந்த
அரண்மனையை

மேற்பார்வை
பார்த்து கட்டுவதற்கு
உறுதுணையாக இருந்தவர்
அரசி கெம்ப நஞ்சம்ணி வாணிவிலாச
சன்னிதானா ஆவர்.

1399-ஆம் ஆண்டில்
யதுவம்சத்தை சேர்ந்த
யதுராயா மன்னரால் மைசூர்
ராஜ்யம் உருவாயிற்று.

உடையார்
மன்னர்கள் வழிவந்த சாமராஜ
உடையாரின் மகள் தேவராஜ
அம்மணி, யதுராயா மன்னரைத்
திருமணம் செய்து மைசூரில்
குடிபுகுந்தார்.

யதுராயா மன்னர்கள்
காலத்திலேயே நிறுவப்பட்ட
மைசூர் அரண்மனை,
ரணதீரா கண்டீரவா நாகராஜ உடையார்
ஆட்சிக் காலத்தில் மின்னலால்
தாக்கப்பட்டு சிதிலமடைந்ததால்
புதிய அரண்மனை கட்டப்பட்டது.

மைசூர் வரலாறு

கி.பி 1399 ஆம்
ஆண்டிலிருந்து யது ராஜ
வம்சத்தினர் விஜய நகர சாம்ராஜ்ய
பிரதிநிதிகளாக மைசூரை ஆள
ஆரம்பித்தனர்.

யது ராஜ
வம்சத்தினரான
பெட்டடா சாமராஜ உடையார்
மைசூர்
கோட்டையை புதுப்பித்து அதை தன்
தலைமையகமாக
வைத்துக்கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் இவர் 1610 ஆம்
ஆன்டு தன் அரசின்
தலைநகரத்தை மைசூரிலிருந்து ஷீரங்கபட்டிணத்துக்கு மாற்றினார்.

1761ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம்
ஆண்டு வரை மைசூரை ஹைதர்
அலியும் திப்பு சுல்தானும்
ஆண்டனர்.

அதன் பின்னர் மைசூர்
திரும்பவும் உடையார்களின்
தலைநகரமாக மாறியது.

1895 ஆம்
ஆண்டிலிருந்து 1940 வரை நான்காம்
கிருஷ்ணராஜ உடையார் தன் ஒப்பற்ற
திட்டங்களின் மூலம் மைசூர்
நகரத்தை அழகு மிகுந்த நகரமாக
மாற்றினார்.

மைசூர் மாநகரம்
அகலமான சாலைகளும்,
பூங்காங்களும், ஏரிகளும், கம்பீரமான
மாளிகைகளும் கொண்ட
அழகு நகரமாக இவர் காலத்தில்
மாறியது.

மைசூரின் பண்பாட்டியல் அம்சங்கள்

மைசூருக்கு வருகை தரும்
வெளியூர் பயணிகள் அனைவரும்
இந்த நகரத்தின்
ஒவ்வொரு அம்சங்களிலும்
ஒரு பிரத்யேக பாரம்பரியமும்
பண்பாடும் கலையம்சமும்
மிளிர்வதை தவறாது உணர
முடியும்.
கலை, கைவினைப்பொருட்கள்,
உணவு, வாழக்கை முறை போன்ற
எல்லா அம்சங்களிலும் மைசூரின்
ஒரு பிரத்யேக
பண்பாட்டு அடையாளம்
மிளிர்வதை காணலாம். அதே சமயம்
மைசூர் மாநகரம் பல்வகைப்பட்ட மக்கள்
வாழும் சர்வதேச
வாழ்க்கை சூழலை கொண்டுள்ளது என்பதும்
ஒரு ஆச்சரியமான விஷயம்.
பல்வகை பிரதேசங்களைச் சார்ந்த,
பல்வகை மொழியை தாய்மொழியாக
கொண்ட,
பல்வேறு மதங்களை பின்பற்றும் மக்கள்
இங்கு ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.

மைசூர் மாவட்ட்த்தின் தலைநகரமாக
விளங்கும் மைசூர் நகரம்
ஒரு சுற்றுலாப்
பயணிக்கென்று பல்வேறு அம்சங்களை தன்னுள்
கொண்டுள்ளது.

வரலாற்று பாரம்பரிய
நினைவுச்சின்னங்கள்,
தொன்மை வாய்ந்த கோயில்கள்,
அருங்காட்சியகங்கள், ஏரிகள் மற்றும்
தோட்டப் பூங்காக்கள் என பல எண்ணற்ற
கவர்ச்சி அம்சங்கள்
இங்கு நிறைந்து காணப்படுகின்றன.

அரண்மனை நகரம் என்று மிக
பொருத்தமாக அழைக்கப்படும்
மைசூர் மாநகரத்தில் பல
அரண்மனைகள் அமைந்துள்ளன.

மைசூர் அரண்மனை
அல்லது அம்பா அரண்மனை என்று அழைக்கப்படும்
பெரிய
அரண்மனையானது இந்தியாவிலேயே அதிகம்
சுற்றுலாப் பயணிகளால்
தரிசிக்கபடும்
நினைவு சின்னமாகும்.

அது தவிர மைசூர்
வனவிலங்கு காட்சியகம்,
சாமுண்டீஸ்வரி கோயில்,
மஹாபலேஸ்வரா கோயில்,
செயிண்ட் ஃபிலோமினா சர்ச்,
பிருந்தாவன் கார்டன், ஜகன்மோஹன்
அரண்மனை ஓவியக்கூடம், லலித்
மஹால் அரண்மனை,
ஜயலட்சுமி விலாஸ் மாளிகை,
ரயில்வே மியூசியம்,
கரன்ஜி ஏரி மற்றும் குக்கார
ஹள்ளி போன்றவை மைசூரின்
பிரசித்தி பெற்ற
சுற்றுலா அம்சங்களாகும்.

மைசூர்
மாநகரத்துக்கு வருகை தரும்
சுற்றுலாப் பயணிகள் அதன்
அருகிலுள்ள பல முக்கியமான
சுற்றுலா ஸ்தலங்களுக்கும்
தவறாமல் விஜயம் செய்கின்றனர்.

ஷீரங்கப்பட்டிணம், நஞ்சன்கூடு ,
சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, தலக்காடு ,
மெல்கோட்டே, சோமநாதபுரா,
ஹலேபேட், பேலூர் , பண்டிபூர்
தேசிய வனவிலங்கு பூங்கா,
சிரவணபெளகொலா மற்றும் கூர்க்
(குடகு) போன்ற முக்கியமான
சுற்றுலா ஸ்தலங்கள் மைசூர்
மாநகருக்கருகில் அமைந்துள்ளன
என்பது குறிப்பிடத் தக்கது.

சாகசத்தை விரும்பும்
மலை ஏறிகளுக்கு ராம்
நகருக்கு அருகிலுள்ள மலைகள்
அருமையான வாய்ப்பை தருகின்றன.

இந்த இடம் மட்டுமில்லாமல்
மைசூருக்கு அருகிலேயே சவண்துர்கா,
கப்பல்துர்கா, தும்கூர் ,
துரஹள்ளி மற்றும் கனகபுரா போன்ற
இடங்களிலும் மலை ஏற்றம்
மேற்கொள்ள பொருத்தமான சூழல்
உள்ளது.

படாமி மற்றும் ஹம்பி
போன்ற இடங்களில் உள்ள
மலைப்பாறை அமைப்புகள் மைசூர்
நகரத்துக்கு வருகை தரும் மலை ஏற்ற
ஆர்வலர்களை பெரிதும் கவர்கின்றன.

பிலிகிரிரங்கணா மலை, சிக்மகளூர் ,
ஹாஸன் மற்றும் குடகு போன்ற
இடங்கள் நடைப்பயணம் மேற்கொள்ள
விரும்பும்
சுற்றுலா பயணிகளுக்கு பொருத்தமான
இடங்களாக விளங்குகின்றன.

மைசூருக்கு வெளியே உள்ள
காவேரி ஃபிஷிங் கேம்ப் என்ற
இடத்தில் தூண்டிலில் மீன்
பிடித்து மகிழலாம்.

பறவைகளை கண்டு மகிழ்வதற்கு ஏற்றவாறு நாகர்கோல்
ராஜீவ் காந்தி நேஷனல் பார்க், பி.ஆர்
ஹில்ஸ் பறவைகள் சரணாலயம் மற்றும்
ரங்கணாதிட்டு பறவைகள் சரணாலயம்
போன்றவை மைசூரை நகரைச்
சுற்றிலும் அமைந்துள்ளன.

மைசூர் நகரம் அங்கு கிடைக்கும்
யானைத் தந்தத்தால் ஆன
கைவினை பொருட்களுக்கு மிகவும்
பிரசித்தி பெற்று விளங்குகிறது.

அது தவிர அழகான
பட்டு துணி வகைகள், சந்தன மரத்தில்
செய்யப்பட்ட கைவினை பொருட்கள்
மற்றும் மரத்தால் உருவாக்கப் பட்ட
பலவகையான கலைப் பொருட்கள்
என்று பல விசேஷப்
பொருட்களுக்கு மைசூர் புகழ்
பெற்றுள்ளது.

தசரா

என்று அழைக்கப்படும் புகழ்
பெற்ற மைசூர்
திருவிழாவானது இங்கு பத்து நாட்களுக்கு தொடர்ந்து கொண்டாடப்படுகிறது.

மைசூர் மக்கள்
எல்லோருமே பெருமையுடன்
கலந்து கொண்டாடும் இந்த
திருவிழா காலத்தின்
போது மைசூர் நகரம் விழாக்கோலம்
பூண்டு வண்ணமயமாகவும்
கோலாகலமாகவும்
காட்சியளிக்கும்.

இக்காலத்தில்
மைசூருக்கு வருகை தரும்
ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும்
தம் சொந்த கவலைகள் எல்லாம்
மறந்து புத்துணர்ச்சியடைவதை நேரில்
பார்த்தால்
மட்டுமே புரிந்து கொள்ள
முடியும்.

கடல் மட்டத்திலிருந்து 770 மீட்டர்
உயரத்தில் கர்நாடக மாநிலத்தின்
தெற்குப் பகுதியில் காவிரி மற்றும்
கபினி ஆறுகளுக்கிடையில்
அமைந்திருக்கும் மைசூர் மாநகரம்
மிதமான
பருவநிலையை யாத்ரீகர்களுக்கு வழங்குகிறது.

மாநிலத் தலைநகரான
பெங்களூரிலிருந்து 140 கி.மீ
தொலைவில் அமைந்துள்ள மைசூர்
நகரம் சாலை மற்றும் ரயில்
போக்குவரத்து மூலம் நல்ல
முறையில் இணைக்கப்பட்டுள்ளது.

மண்டகள்ளி விமான நிலையம்
என்று அழைக்கப்படும் மைசூர்
விமான நிலையம் ஒரு உள்
நாட்டு விமான நிலையமாக
இயங்குகிறது. இங்கிருந்து முக்கிய
இந்திய நகரங்களுக்கு தினமும்
விமான சேவைகள் உள்ளன.
உயிரோட்டமான தெருக்களையும்
சிறப்பான
வரலாற்று பின்னணியையும்
கொண்டுள்ள மைசூர் நகரம்
உண்மையிலேயே கர்நாடக
மாநிலத்தின் பண்பாட்டு தலை நகரம்
என்று அழைக்கப்படுவதற்கு பொருத்தமான
நகரமாகும்.

கர்ண பரம்பரை உடையார்களே

உடையார் வம்ச அரசர்கள் :

ஹோயஷல மன்னர்களுக்கு பிறகு,
மைசூர் உடையார் வம்ச அரசர்கள்
சௌரஷ்டிரர்களை ஆதரித்து உள்ளனர்.

  மைசூர் மகாராஜா பற்றிய கர்ண
பரம்பரை செய்திகளும்
இதனை உறுதிப் படுத்து கின்றன.

மைசூர் அரண்மனையில்
தசரா விழா நடத்தப்படும்
காலங்களில், சேலத்தில்
இருந்து மைசூர் செல்லும் வழக்கம்
இருந்து உள்ளது.  மைசூர்
சென்று தன்
மகாராஜாவை மரியாதையை
செலுத்தும் பழக்கம்
இருந்து உள்ளது.  காலப் போக்கில்,
சேலம் மைசூர் சாம்ராஜ்யத்தில்
இல்லாவிட்டாலும், சௌராஷ்டிர
நெசவாளர்களின் துணிகள் மைசூர்
சமஸ்தானம் காலம்
வரை ஆதரித்தே வந்துள்ளது.

மைசூர் உடையார் அரண்மனை

இந்தியாவுக்குள் நுழைந்ததும்
அனைவரும் காண விழையும் நகரம்
மைசூர். பட்டு, மல்லிகை, சந்தனம்,
ஊதுவத்தியை நினைத்தாலே நினைவுக்கு வரும்
மைசூரில், அனைவரும் காணத்
துடிக்கும் கட்டடம் உடையாரின்
அம்பாவிலாஸ் அரண்மனை.

தசராவிழா, மன்னர் குடும்பத்
திருமணங்கள், மன்னர்களின்
வரலாற்றுச் சந்திப்புகள்,
நவராத்திரி விழா போன்றவற்றுக்குப்
புகழ்வாய்ந்த மைசூர்
அரண்மனையை ஆண்டுதோறும் 15
லட்சம் சுற்றுலாப் பயணிகள்
கண்டு ரசிக்கிறார்கள்.

68 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள
அரண்மனையின் அழகை, 96 ஆயிரம்
பல்புகளின் ஒளிவெள்ளத்தில் காணக்
கண் கோடி போதாது.

மைசூருக்கு வரும் எவரும்
தவறாமல் காணும் அரண்மனையின்
செங்கற்களில் இழையோடும்
சோகக்கதை அனைவரின்
இதயத்தையும் பிழிந்துவிடும்.
17-ம் நூற்றாண்டில் இந்த இடத்தில்
அமைந்திருந்த அரண்மனையில்
உடையார் மன்னர்கள் வசித்து வந்தனர்.

ஆட்சியைக் கைப்பற்றிய ஹைதர்
அலியின் மகன் திப்புசுல்தான்,
உடையார்களின் சுவடு தெரியாமல்
மைசூர் நகரை அழித்ததோடு,
அரண்மனையையும்
தரைமட்டமாக்கினார்.

மைசூர் நகரில் நாசர்பாத் என்ற புதிய
நகரை உருவாக்க திப்புசுல்தான்
திட்டமிட்டிருந்தார். ஆனால் 1799-ம்
ஆண்டில் ஆங்கிலேயர்களுடனான 4-
வது மைசூர் போரில்
திப்புசுல்தான் உயிரிழந்தார்.

மைசூர் அரசாட்சி மீண்டும்
உடையார்களின்
கைக்கு திரும்பியது.

உடையார்களுக்கு அரண்மனை இல்லாததால்,
சிறிய வீட்டில் 1799-ல் மூன்றாம்
கிருஷ்ணராஜ உடையார் மன்னராக
முடிசூட்டப்பட்டார்.

மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார்
மரத்தினாலான பிரம்மாண்டமான
அரண்மனையை கட்டினார்.

அதில்
ஆயுதச்சாலை, நூலகம், அலுவலகம்,
திருமண மண்டபம், தனி அறைகள்,
உணவறை, கூட்ட
அரங்கு ஆகியவை அமைத்து,
மிகப்பெரிய நுழைவு வாயிலைக்
கட்டினார்.

245 அடி நீளம், 156 அடி அகலம்,
145 அடி உயரத்தில் கட்டப்பட்ட
அரண்மனைக்கு உயரமான
சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.

ராணி கெம்பராஜமம்மணி தலைமையில்,
இளவரசி ஜெயலட்சுமம்மணி மற்றும்
இளவரசர் எம்.காந்தராஜ் அர்ஸ்
இருவருக்கும் திருமணம்
நடைபெற்றது.

அன்று மாலை அகல்விளக்கு கீழே விழுந்து தீ
பற்றியதில் அரண்மனை முழுவதும்
எரிந்து சேதமானது.

திருமணமண்டபம், அம்பாவிலாஸ்,
ராமவிலாஸ்
அரண்மனை ஆகியவை தீயில்
கருகி தரைமட்டமானது.

பெங்களூரில் இருந்து தீயணைப்புப்
படையினர் வருவதற்குள் தங்கம்,
வெள்ளி ஆபரணங்கள், ஆயுதங்கள்,
சிம்மாசனம்
வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன.

இதனால் மனம் நொந்திருந்த
கெம்பராஜமம்மணி, ஷிம்லாவில் உள்ள
வைஸ்ராய் மாளிகையைப்
போன்றதொரு அரண்மனையை மைசூரில்
கட்டுவதற்கு வருமாறு எச்.இர்வின்
என்ற
ஆங்கிலேயருக்கு அழைப்பு விடுத்தார்.

மயில்தொட்டி, திருமண மண்டபம்,
மயில் அரங்கம், கண்ணாடிக்கூரை,
பளிங்குத்தரை, மின்தூக்கி,
ஆயுதச்சாலை, நூலகம், கூட்ட
அரங்கம், தர்பார் மண்டபம், அறைகள்
கொண்ட 3
அடுக்கு அரண்மனையை ஹொய்சளர்
மற்றும் கிரேக்கக் கட்டடக் கலைப்படி,
1897 அக்டோபர் முதல் 1912-ம்
ஆண்டுவரை 15 ஆண்டுகளில் இர்வின்
கட்டி முடித்தார்.

இதில் 5 அடுக்கு கோபுரமும்,
தங்கத்தால் பூசப்பட்ட
குவிந்தக்கூரையும் (டூம்) உண்டு.

வாஸ்து காரணத்துக்காக
அரண்மனையில் சில வடிவங்கள் 1932-ல்
மாற்றியமைக்கப்பட்டது.

இப்படி அழகைக் கொட்டி வடிக்கப்பட்ட
எழில் கொஞ்சும் அரண்மனையைதான்
இப்போது நாம் காண்கிறோம்.

கால
வெள்ளத்தில் உடையார்
ஆட்சி மறைந்தாலும், ஆட்சியின்
மிச்சத்தை இன்னும் நினைவூட்டும்
அரண்மனை மட்டும் வரலாற்றுச்
சின்னமாக
ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.

உடையார்களின் அடையாளச்
சின்னமாகத் திகழும் அரண்மனையின்
நூற்றாண்டு விழாவை அக்டோபரில்
கொண்டாட கர்நாடக
அரசு திட்டமிட்டுள்ளதாகவும்,
நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும்
நடைபெறும் என்றும் மாவட்ட
பொறுப்பு அமைச்சர் எஸ்.ஏ.ராமதாஸ்
தெரிவித்தார்.

1892வில்
சிகாகோ மாநாட்டிற்குச் செல்லும்
முன்பு சுவாமி, திவான்
சேஷாத்ரி ஐயரின்
வேண்டுகோளுக்கிணங்க
மைசூருக்கு வந்துள்ளார்.
அப்போதைய மகாராஜா -
சாமராஜேந்திர உடையார்.
மகாராஜாவின் அறிவு, ஆற்றல்
மற்றும்
அவரது பல்நோக்கு திறமைகளை
வியந்துள்ள
சுவாமி விவேகானந்தர், அந்த
மகாராஜா 1894ல் இறந்தபோது - ’The
Maharaja of Mysore is dead - one of our greatest
hopes' என்றாராம்.
இப்படியாக, 1399ல்
யாதுரயா தோற்றுவித்த மைசூர்
ராஜாவின் ஆட்சியின் தற்போதைய
வாரிசு - கண்டதத்தா நரசிம்மராஜர்.
2004ல் காங்கிரஸ் சார்பாக தேர்தலில்
நின்ற இவர் பிஜேபி வேட்பாளரிடம்
தோற்றுப் போனார். இவர் காட்டிய
சொத்து மதிப்பு ரூ.1523 கோடி.
தசரா நாட்களில் மட்டும்
மகாராஜா கெட்டப்பில் வலம்
வருகிறார்.