Monday 18 November 2013

கிருஷ்ணதேவராய உடையார்

இந்தியாவின் ஆக்ராவில்
தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும்
இடம், மைசூர் அம்பாவிலாஸ்
அரண்மனைதான்.

மைசூர் அரண்மனை கட்டப்பட்டு இந்த
ஆண்டுடன் நூறாண்டுகள்
நிறைவடைகிறது.

மைசூர்
யதுவம்ச மன்னர்களின் வரலாற்றைக்
கூறும் மைசூர் அரண்மனை 1897-ம்
ஆண்டு அக்டோபர் மாதம் கட்ட
துவங்கப்பட்டது.

பதினைந்து ஆண்டு கால மனித
உழைப்பிற்குப் பின்னர் 1912-ம் ஆம்
ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.
இதற்கான செலவு 41 லட்சத்து 47
ஆயிரத்து 913 ரூபாய்.

உடையார் மன்னர்களின்
புகழுக்கு எடுத்துக்காட்டாக
விளங்கும் இந்த
அரண்மனையை

மேற்பார்வை
பார்த்து கட்டுவதற்கு
உறுதுணையாக இருந்தவர்
அரசி கெம்ப நஞ்சம்ணி வாணிவிலாச
சன்னிதானா ஆவர்.

1399-ஆம் ஆண்டில்
யதுவம்சத்தை சேர்ந்த
யதுராயா மன்னரால் மைசூர்
ராஜ்யம் உருவாயிற்று.

உடையார்
மன்னர்கள் வழிவந்த சாமராஜ
உடையாரின் மகள் தேவராஜ
அம்மணி, யதுராயா மன்னரைத்
திருமணம் செய்து மைசூரில்
குடிபுகுந்தார்.

யதுராயா மன்னர்கள்
காலத்திலேயே நிறுவப்பட்ட
மைசூர் அரண்மனை,
ரணதீரா கண்டீரவா நாகராஜ உடையார்
ஆட்சிக் காலத்தில் மின்னலால்
தாக்கப்பட்டு சிதிலமடைந்ததால்
புதிய அரண்மனை கட்டப்பட்டது.

No comments:

Post a Comment