Tuesday 19 November 2013

உடையார் வள்ளால மகாராஜா கட்டிய திருவண்ணாமலை சிவன் கோயிலிற்கு உடையார் கிருஷ்ணதேவராயரின் பங்கு

உடையார் வள்ளால மகாராஜா கட்டிய கோயிலைப் பற்றியும்

அருணாச்சலேஸ்வரரை பற்றியும்
திருவண்ணாமலையை பற்றியும்
அருணகிரிநாதர் அவர்கள் எழுத்துகள்
முலம் சிறப்பாக உரைத்துள்ளார்.

இப்படைப்புகளை வாசித்த சோழ உடையார் பரம்பரை
மன்னர்கள் மிகவும்
பூரிப்படைந்து இக்கோயிலுக்காக பல
உதவிகளை செய்துள்ளனர்.

மேலும்
கடவுள் அருணாச்சலேஸ்வரர்
மகிமை மீது மிகுந்த
நம்பிக்கை அடைந்துள்ளனர்.

சோழ உடையார் பரம்பரை
மன்னர்கள் பல கோபுரங்கள், மண்டபங்கள்,
கோயிலை சேர்ந்த கட்டிடங்கள்
கட்டிகொடுத்து கடந்த ஆயிரம் காலமாக
கோயில் முன்னேற்றம் அடைய
உதவியுள்ளனர்.

மேலும் விஜய நகரை ஆண்ட மன்னர்
கிருஷ்ணதேவராயர் உடையார்
திருவண்ணாமலை கோயில்
வளர்ச்சிக்காக கோபுரங்கள், மண்டபங்கள்
என பல
கட்டிடங்களை கட்டிக்கொடுத்து உதவியுள்ளார்.

இதில் 217 அடி கொண்ட ராஜகோபுரம்
மன்னர் கிருஷ்ணதேவராயர் உடையார் உதவியால்
உருவாக்கப்பட்டது.

இவர்
அண்ணாமலையாரின் தீவிர பக்தராக
விளங்கினார்.

இக்கோபுரமானது இந்தியாவின்
உயரத்தில்
இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

மேலும் இக்கோயில் சிவன்
பார்வதிக்காக இந்தியாவில் கட்டப்பட்ட
மிக பெரிய கோயில்
என்று வரலாறு கூறுகிறது.

மற்றும்
ஒரு சிவன் பக்தரான
பல்லாலா இக்கோயிலுக்காக பல
கட்டிடங்கள் கட்டி கொடுத்துள்ளார்.
இவர்
செய்த உதவியை சிவனடியார்
பாராட்டும் விதத்தில்
பல்லாலா இறைவனடி சேர்ந்த
பின்பு சிவபெருமானே வந்து இம்மன்னருக்கு வாரிசு இல்லை என்றதால்
அவரே இறுதி சடங்குகள் செய்தார் என
வரலாறு கூறுகிறது.

சிவனடியார் இங்கு அக்னி வடிவத்தில்
உருவான
மற்றொரு வரலாறு சுவாரசியமான
புராணம். ஒரு தருணத்தில்
பிரம்மா மற்றும்
விஷ்ணுவிற்கு வாக்குவாதம்
ஈற்பட்டு உச்சத்தை எட்டிய நிலையில்,
சிவன்
இதற்கு ஒரு முடிவை எடுத்துரைக்க
அக்னி வடிவத்தில்
தோற்றமளித்து விஷ்ணுவையும்,
பிரம்மாவையும் சிவனுடைய கால்கள்
மற்றும் சிரசத்தை கண்டுபிடிக்க சவால்
விடுத்தார்.

இந்த சவாலை ஏற்ற
பிரம்மா மற்றும்
விஷ்ணு தோல்வியடைந்தனர். இந்த
போட்டியில் பிரம்மா ஜெயிக்க
சிவனிடம் பொய் சொல்லிவிட்டார்.
இதனால் கோபமடைந்த சிவன்
பிரம்மாவிற்கு சாபம் கொடுத்தார். இந்த
சாபத்தினால்
பிரம்மாவிற்கு இந்தியாவில் எந்த
இடத்திலும் கோயில் இல்லை. இதனால்
பிரம்மாவை யாரும் எந்த
கோயிலிலும் சென்று வணங்க
முடியாத நிலை உள்ளது.

இன்று திருவண்ணாமலையில்
சிவனடியார் அக்னியாக
வழிபடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய
காரணமாக உள்ளது. ஆதலால்
இது ஒரு பஞ்சபூத ஸ்தலமாக
தமிழ்நாட்டில் திகழ்கிறது.

No comments:

Post a Comment