Monday 18 November 2013

உடையார் வழிபட்ட சாமுண்டீஸ்வரி

சூரிலிருந்து 13வது கி.மீ.
தொலைவில்
சாமுண்டி குன்று உள்ளது.

சாமுண்டீஸ்வரி குடிகொண்டுள்ள
இடம் இது.

மலையின் மீது கோயில்
அமைந்துள்ளதால் 1000 படிகள் ஏறிச்
சென்று தரிசிக்க வேண்டும்.

இந்த மலையின் உயரம் 3489 அடி.
வழியில் பாதி தொலைவில் அழகிய
நந்தியைக் காணலாம்.

கருங்கல்லால்
ஆன இது எண்ணெய் மெழுகியும், பல
அபிஷேக தீர்த்தங்கள் ஊற்றியும்
இன்று முழு  கறுப்பாக
மாறிவிட்டது.

16 அடி உயரம் கொண்ட
கம்பீர நந்தியை 1659ஆம்
ஆண்டு மைசூர் மகாராஜ கொட்ட
தேவராஜ உடையார்
பிரதிஷ்டை செய்தார்.

ஸ்கந்த புராணம்

உட்பட சில
புராணங்கள் இந்த இடத்தை

"திரிமுட
க்ஷேத்திரம்'

என வர்ணிக்கின்றன.

சுற்றி எட்டு மலைகள் உள்ளன.

மேற்குப் புறத்தில் உள்ள
மலை சாமுண்டி.

இந்தப் பகுதியில் மிகப் பழைய
மகாபலேஸ்வரர் சிவன் கோயில்
உள்ளது.
இதனால் இந்த
மலையை மகாபலாத்ரி எனவும்
அழைக்கின்றர்.

தேவி சாமுண்டீஸ்வரி நினைவாகவே இது "சாமுண்டி மலை'
என அழைக்கப்படுகிறது.

தசரா நேரத்தில் அரண்மனை உட்பட
மைசூர் முழுவதும் அலங்கார
விளக்குகள் போட்டு ஜொலிக்கும்.

அதனை  இந்த மலையின்
மீதிருந்து பார்த்தோமானால்,
"ஆஹா... தேவர் உலகமோ' என வியக்க
வைக்கும்.

சாமுண்டி ஆதிசக்தியாக
வணங்கப்படுகிறார். அவள் பிரம்மா,
விஷ்ணு, சிவன் ஆகிய
மூன்றுமே ஒன்றான  "மகாபிரம்மம்'
"மகாசக்தி' என மக்கள் நம்புகின்றனர்.

சாமுண்டி கோயிலுக்கு இடது புறம்
மகிஷாசுரனை காணலாம். 3.5 மீட்டர்
உயரத்தில், வலது கையில்
கத்தியுடனும், இடது கையில்
பாம்புடனும் ஆக்ரோஷமாய்
இருக்கிறான்.

சாமுண்டி கோயில் 1000
ஆண்டுகளுக்கும் மேல்
பழைமையானது.

முதலில் சின்ன
கோயிலாக இருந்து 1399ல் மைசூர்
உடையார் ஆட்சி வந்ததும்,
பெரிதாக்கப்பட்ட கோயில்.

மைசூர் உடையார்
மன்னர்களின்  குலதெய்வம்
சாமுண்டேஸ்வரி.

ஹோய்சாள - விஜயநகர - மைசூர்
மன்னர்களும் இந்தக்
கோயிலுக்கு ஏராளமான
திருப்பணிகளைச் செய்துள்ளனர்.

கோயிலின் ஏழு அடுக்கு கோபுரம்
நம்மை கம்பீரமாய் வரவேற்கிறது.

No comments:

Post a Comment